சாணார்பட்டி அருகே மின்மோட்டார் திருடிய 3 பேர் கைது

சாணார்பட்டி அருகே மின்மோட்டார் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-06 20:04 GMT

சாணார்பட்டி அருகே உள்ள வி.எஸ்.கே.குரும்பபட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் சந்தேகப்படும் வகையில் சிலர் நடமாடினர். இதனை பார்த்த சின்னையா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தோட்டத்துக்கு சென்று, அங்கு நின்றிருந்த 3 பேரை மடக்கி பிடித்தார். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் விசாரித்தபோது, சின்னையா தோட்டத்து கிணற்றில் இருந்த மின் மோட்டாரை அவர்கள் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் போலீசாரிடம், அவர்கள் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் நத்தம் அருகே உள்ள பேயம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 33), மணக்காட்டூரை சேர்ந்த மெய்யன் (வயது 19), 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சின்னையா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்