கட்டுமான கம்பிகளை திருடிய 3 பேர் கைது

மயிலாடுதுறை அருகே கட்டுமான கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-10 18:45 GMT

மயிலாடுதுறை அருகே கட்டுமான கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கட்டுமான கம்பிகள் திருட்டு

மயிலாடுதுறை அருகே நீடூர் மஜித் காலனியைச் சேர்ந்தவர் சல்மான்பாரிஸ் (வயது 46). பில்டிங் காண்ட்ராக்டர் ஆவார். நீடூரில் முகமது ஷப்ரி என்பவருக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக கட்டுமானப் பணிக்கு தேவையான கம்பிகளை சல்மான்பாரிஸ் இறக்கி வைத்துள்ளார். நேற்று முன்தினம் அந்த கட்டுமான கம்பிகளை 4 பேர் சேர்ந்து எடுத்து சென்றுள்ளனர்.

இதனை கண்ட சல்மான்பாரிஸ் அவர்களை தடுத்து நிறுத்தி கூச்சலிட்டுள்ளார். பின்னர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ஒருவருக்கு வலைவீச்சு

சல்மான்பாரிஸ் கொடுத்த புகாரின் பேரில் கம்பிகளை திருடி சென்றதாக நீடூர் கீழத் தெருவை சேர்ந்த மணி மகன் அரவிந்தகுமார் (32), நீடூர் ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார் (32), நீடூர் கோவில்பத்து தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் கமலக்கண்ணன் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு தொடர்பாக நீடூர் ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்