மில் வேனில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

பழனி அருகே மில் வேனில் பேட்டரி திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-30 16:12 GMT

பழனி பகுதியில் உள்ள தனியார் மில்லில் ஆயக்குடி, அமரபூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக மில் நிர்வாகம் சார்பில் வேன்கள் இயக்கப்படுகின்றன. இந்த வேன்கள், அமரபூண்டி பகுதியில் நிறுத்தப்படுகிறது. இந்தநிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனின் 3 பேட்டரிகள் திருடு போனது.

இதுகுறித்து மில் நிர்வாகம் சார்பில் ஆயக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் வேனில் பேட்டரிகளை திருடியது அமரபூண்டியை சேர்ந்த செல்லத்துரை (வயது 20), கருப்புசாமி (29), ரூக்குவார்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்