லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற ராமலிங்கம் (வயது 65) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் சாத்தூர் நகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் அப்துல்காதர் ஆகியோர் சாத்தூர் மெயின்ரோடு பழைய அரசு மருத்துவமனை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநில லாட்டரி நம்பர் எழுதி விற்பனைக்காக வைத்திருந்த சாகுல்ஹமீது (49) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ. 379 மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பழைய படந்தால் ரோடு முக்கு பகுதியில் வெளிமாநில லாட்டரி நம்பர் எழுதி விற்பனைக்காக வைத்திருந்த சம்சுதீன் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ. 4,030, செல்போன் ஆகியவற்றை சாத்தூர் நகர் போலீசார் பறிமுதல் செய்தனர்.