லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
விழுப்புரம்
விழுப்புரம் அருகே ஜி.கரைமேடு பகுதியில் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த விழுப்புரம் அருகே ஏ.குச்சிப்பாளையத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி(வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டிவனம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழ் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த திண்டிவனம் கிடங்கல்-2 பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் மோகன்(48) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த திண்டிவனம் பெலாகுப்பம்ரோடு, பாரதிதாசன் பேட்டை விஜயன் மகன் சுரேஷ்(23) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 48 லாட்டரி சீட்டு, ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.