லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் தாலுகா அலுவலக பஸ் நிறுத்தம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த மேட்டுத்தெருவை சேர்ந்த பெரியசாமி (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் காமராஜர் வளைவு சிக்னல் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த எசனை மாதா கோவில் தெருவை சேர்ந்த மரியதாஸ் (50), பெரம்பலூரில் பழைய நகராட்சி அலுவலகம் தெப்பக்குளம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த அரணாரையை சேர்ந்த குணசேகரன் (65) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரத்து 250 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.