சாராயம், கஞ்சா விற்பனை 3 பேர் கைது
சின்னசேலம் அருகே சாராயம், கஞ்சா விற்பனை 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே பைத்தந்துரை ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி தலைமையில் போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் எரிசாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்ததை பார்த்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் 3 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சின்னதுரை(வயது 33), சின்னதம்பி மகன் வெற்றி(27), வாணியந்தல் கிராமம் நடேசன் மகன் பழனிவேல்(42) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் கைது செய்தபோலீசார் அவர்களிடம் இருந்து 105 லிட்டர் எரி சாராயம் மற்றும் 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த விஜியராஜ், வடகரை தாழனூர் கிராமம் ராஜீவ்காந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.