கஞ்சா விற்ற 3 பேர் கைது

மதுரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-05 20:54 GMT

மதுரை,

மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார், வாழைத்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சம்மட்டிபுரத்தை சேர்ந்த நவ்மீன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுபோல் பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஆரப்பாளையத்தை சேர்ந்த நாகராஜன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். எல்லீஸ்நகர் பாலத்தில் கஞ்சா விற்ற, அசோக்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்