கோவை
கோவை ரத்தினபுரி, வெரைட்டிஹால் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்கேத்துக்கு இடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், தர்மபுரி லோகேஷ் (21), கோவை தர்மேந்திரா (46), ஆசிக் அலி (31) என்பதும் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந் 1½ கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ, மோட்டார் சைக்கிள், 2 செல்போன் மற்றும் ரூ.3,500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.