கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

Update: 2023-01-12 18:45 GMT

கூடலூர்

கூடலூர், ஓவேலி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராகிம், முத்து முருகன், அசோக் உள்ளிட்ட போலீசார் கூடலூர், ஓவேலி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றதாக கூடலூரை சேர்ந்த அலி(வயது 47), 1-ம் மைல் கோகோகாடு பகுதியை சேர்ந்த முகமது ரபிக்(45), ஓவேலி பேரூராட்சி சூண்டி மரப்பாலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த சுமார் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்