பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவாச்சூர் பைபாஸ் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் கஞ்சா விற்ற 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கைலுகா அயினாபுரம் நடுத்தெருவை சேர்ந்த அஜய் (வயது 22), நவீன்குமார் (19), வேப்பந்தட்டை தாலுகா தொண்டப்பாடியை சேர்ந்த கார்த்திக் (18) என்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடமிருந்து தலா 10 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1,000 ஆகும். பின்னர் அவர்கள் 3 பேரும் பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.