கஞ்சா விற்ற 3 பேர் கைது

அரக்கோணம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-07-27 00:10 IST

அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று சம்பவ இடத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மங்கம்மாபேட்டை ஏரிக்கரை அருகே மறைவான இடத்தில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 26), அம்மனூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (24), அரிகிலபாடி பகுதியை சேர்ந்த பாரதிராஜா (25) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்