கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
அரக்கோணம் விண்டர்பேட்டை, திருவள்ளூர் ரோடு பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது விண்டர்பேட்டை ரெயில்வே குடியிருப்பு பகுதியில் கோவில் பின் புறத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அரக்கோணம் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த சசி மற்றும் தணிகை போளூர் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் என்பதும், அவர்களிடம் நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போன்று திருவள்ளூர் ரோட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ. பின்புறத்தின் புதர் மறைவில் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அரக்கோணம் கிருஷ்ணாம் பேட்டை பகுதியை சேர்ந்த கவுதம் (22) என்பதும், கஞ்சா வைத்திருந்தும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்ப்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.