பெயிண்டரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

பெயிண்டரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-07-10 21:27 GMT

திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (வயது 28). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு முன்விரோதம் காரணமாக இவரது தம்பி பரணியை அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருண்குமார்(27), ராஜசேகரன் (25), நவாஸ் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று விக்னேஷ் குமார் பீமநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அருண்குமார், ராஜசேகரன், நவாஸ் ஆகியோர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து விக்னேஷ்குமார் தன்னுடைய தம்பியை தாக்கிய அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 3 வாலிபர்களும் விக்னேஷ்குமாரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டினர். இது குறித்து விக்னேஷ்குமார் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்