சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது
சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருமாக்கூடலூர் காட்டுப்பகுதியில் சிலர் அனுமதியின்றி சேவல்களை வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதையடுத்து அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக ஒத்தக்கடையை சேர்ந்த ரகுநாதன் (வயது 27), குடித்தெருவை சேர்ந்த பிரபாகரன் (24), நெரூரை சேர்ந்த ஆனந்த் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மகேஷ், வசந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.