விருதுநகர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). இவருக்கும் இவரது உறவினர் கருப்பசாமிக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்த நிலையில் நேற்று கருப்பசாமி, அவரது மனைவி பாக்கியலட்சுமி, மகன் பிரபாகரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து லட்சுமியை தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த லட்சுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுபற்றி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.