முதியவரை தாக்கிய 3 பேர் கைது

வாணியம்பாடி அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-30 18:11 GMT

அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 62). இவர் புத்துக்கோவிலில் இருந்து அம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த 5 பேர் முதியவரின் வாகனத்தை முந்தி சென்றதில் தகராறு ஏற்பட்டு 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கி உள்ளனர். இதில் அவருக்கு வலது கண்ணில் பலத்த காயம் பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன் பேரில் அம்பலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப் பதிவு செய்து, முதியவரை தாக்கிய சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த அபினேஷ் (23), விக்னேஷ் (30), பாலாஜி (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள மோகன், சீமான் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்