ராணுவ வீரரை தாக்கிய 3 பேர் கைது

ராணுவ வீரரை தாக்கிய 3 பேர் கைது

Update: 2023-08-29 19:15 GMT

தொண்டாமுத்தூர்

மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட ராணுவ வீரரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆபாசமான வார்த்தைபேசி தகராறு

தொண்டாமுத்தூர் அருகேய உள்ள அருள்ஜோதி நகரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 35). முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது வடவள்ளியில் உள்ள தனியார் ஓட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இரவு முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஜெகதீஸ்வரி, அவரது வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 பேர்ஜெகதீஸ்வரியை பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டனர்.

தாக்குதல்

அப்போது, வீட்டிற்கு வந்த மருதுபாண்டி, மனைவியிடம் தகராறு செய்த 3 வாலிபர்களை தட்டிக்கேட்டார். இதனை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரை சரமாரியாக தாக்கினர்.

மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து முகத்தின் கீழே குத்தினர். இதில், அவருக்கு கழுத்து, முகத்தில் காயம் ஏற்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரி, தனது கணவரை காப்பாற்ற சென்ற போது, அவரையும் தாக்கினர். இது குறித்த தகவலின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

3 பேர் கைது

அவர்கள் 3 பேரையும், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் குளத்துப்பாளை யம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கண்ணதாசன் (20), வடவள்ளி, பொம்மணம்பாளையத்தை சேர்ந்த பால சபரிஸ் (22), வடவள்ளி சிறுவாணி சாலையை சேர்ந்த கமலேஷ் (27) என்பதும், போதையில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு, முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்