வேனில் ரேஷன் அரிசி, கோதுமை கடத்தல் -3 பேர் கைது

வேனில் ரேஷன் அரிசி, கோதுமை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-11-24 19:10 GMT


மதுரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மதுரை சிந்தாமணி ரிங்ரோடு அருகே அவர்கள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி, கோதுமை மூடை, மூடையாக இருந்தது. உடனே போலீசார் அந்த வண்டியுடன் அதில் இருந்த 1¼ டன் ரேஷன் அரிசி, 1 டன் கோதுமை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜர்புரத்தை சேர்ந்த வண்டி உரிமையாளர் பாண்டி (வயது 42), ஐராவதநல்லூரை சேர்ந்த விக்னேஷ் (28), வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த முத்துமணி (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்