3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் திறப்பு

சயனபுரம் ஊராட்சியில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் திறக்கப்பட்டது.

Update: 2022-10-05 17:36 GMT

நெமிலி ஒன்றியம், சயனபுரம், புதுகண்டிகை, சயனபுரம் காலனி ஆகிய 3 இடங்களில் ஊராட்சி நிதி மற்றும் ஒன்றிய நிதியில் இருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் 3 மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு தலைமை தாங்கினார். நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை திறந்து வைத்தார்.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகன்யா ரவி, ஊராட்சி எழுத்தர் யுவராஜ், முஹம்மது அப்துல் ரஹ்மான், ரமேஷ், பெருமாள், ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்