ரூ.13 லட்சத்தில் புதிய 3 மின்மாற்றிகள்; எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டையில் ரூ.13 லட்சத்தில் புதிய 3 மின்மாற்றிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update:2023-10-07 02:10 IST

நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின்படி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் காளிதாசன் வழிகாட்டுதலின்படி, நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் ரசிகமணி டி.கே.சி. தெரு, கவிமணி தெரு, ராமலிங்கனார் தெரு ஆகிய 3 தெருக்களில் ரூ.13 லட்சம் மதிப்பில் புதிதாக 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.

அதனை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் காளிதாசன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரவடிவு, உதவி மின்பொறியாளர்கள் வெங்கடேஷ், ஜன்னத்துல் ஷிபாயா, வளர்மதி மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்