வாலிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-23 19:11 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிதி நிறுவன ஊழியர்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே கோடாரங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவருடைய மகன் செல்வா என்ற சிவராமன் (வயது 25). இவர் பி.ஏ. படித்து விட்டு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான சுடலைமுத்து குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சிவராமன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது கல்குவாரி அருகில் சாலையோரம் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் 3 பேர் கைது

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரம்மதேசத்தைச் சேர்ந்த முருகன், அம்பையைச் சேர்ந்த வெங்கடேஷ், மருதப்புரத்தைச் சேர்ந்த ராசு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் நேற்று கோடாரங்குளத்தை சேர்ந்த சங்கர், வைத்திலிங்கம், இசக்கிப்பாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்