ரூ.50 லட்சம் கேட்டு நண்பரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

ரூ.50 லட்சம் கேட்டு நண்பரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-03-26 22:45 GMT


மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சகாதீன் (வயது 33). இவர் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்குமுன்பு, அவரை மர்ம கும்பல் கடத்தி சென்றது. அந்த கும்பல் சகாதீன் மனைவிக்கு போன் செய்து, ரூ.50 லட்சம் தந்தால் கணவரை உயிருடன் விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்துபோன அவரது மனைவி, அக்கம் பக்கத்தில் பணம் திரட்டி ரூ.1 லட்சத்தை அந்த கும்பலிடம் கொடுத்தார். பின்னர் அந்த கும்பல் சகாதீனை மதுரை-சிவகங்கை ரோட்டில் இறக்கி விட்டு சென்றது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகன் நாதன் ஆலோசனையின் பேரில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் சகாதீன் நண்பர்கள் சிலர் அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்டது ஆத்திப், அப்துல் இம்ரான் (23), அகில் ஆஷிக் (24), முகமது சபீக் (23) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பாலாஜி அண்ணாமலை (22), வாசிம் அக்ரம் (23), கார்த்திக் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்