விருதுநகர் தொழிலதிபர் குமரவேல் கொலை வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் நேற்று விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற வெங்கடேஸ்வரன் (வயது 25), விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்த விஜயகுமார் (28) உள்பட 3 பேரையும் இந்நகர் மேற்கு போலீசார் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.