உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு 3 அமைச்சர்கள், எம்எல்ஏ வழங்கினர்

கொள்ளுக்காரன்குட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 3 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பரிசு வழங்கினர்.

Update: 2022-12-22 18:45 GMT

நெய்வேலி, 

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.சார்பில் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொள்ளுக்காரன்குட்டையில் மாநில அளவிலான கபடி போட்டியை கடந்த 19-ந் தேதி சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாக நடைபெற்ற இந்த போட்டியில் தஞ்சாவூர், சென்னை, மதுரை, நெய்வேலி, கடலூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கபடி அணிகள் கலந்து கொண்டன. இதில் ஆண்களுக்கான கபடி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.

இதேபோல் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் சிட்டி போலீ்ஸ் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

பரிசு

இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசு வென்ற ஆண்கள் அணிக்கு ரூ. 1½ லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ.75 ஆயிரமும் வழங்கினர்.

இதில் பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன், மண்டல வன பாதுகாவலர் மாரிமுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், த.வா.க.மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால்வளவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சபியுல்லா, ராஜேந்திரன், தொ.மு.ச.பேரவை இணை பொதுச்செயலாளர் சுகுமார், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, என்.எல்.சி. தொ.மு.ச. தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் பாரி, பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு மற்றும் கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், வள்ளலார் கல்வி குழும நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்