தனியார் நிறுவனத்தில் ரூ.3¼ லட்சம் திருட்டு
தனியார் நிறுவனத்தில் ரூ.3¼ லட்சம் திருட்டு போனது.
புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் முன்பக்க கதவு வழியாக மர்மநபர்கள் நுழைந்து ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் ஜெயக்குமார், திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரிக்கின்றனர்.