ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
லாரியின் தார்ப்பாயை பிரித்து ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 46). இவர் லாரியில் காஞ்சீபுரத்தில் இருந்து மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி கொண்டு மதுரை டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு வந்தார். மதுரை பாண்டிகோவில் சோதனைச்சாவடி அருகே வண்டியை நிறுத்தி விட்டு டீ சாப்பிட சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த போது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்பட்டு இருந்தது. மேலும் வண்டியில் வைத்திருந்த 40 பெட்டி மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருந்தன. இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.