கரை ஒதுங்கிய 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள்

தரங்கம்பாடி அருகே 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-12 19:30 GMT

தரங்கம்பாடி அருகே 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கஞ்சா பொட்டலங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி ஊராட்சி சின்னூர்பேட்டை மீனவ கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 2 பொட்டலங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள், தரங்கம்பாடி கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி போலீசார் அங்கு சென்று பொட்டலங்களை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பொட்டலங்களிலும் தலா ஒரு கிலோ வீதம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கடலோர போலீசார் விசாரணை

இதேபோல் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் நேற்று ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் கரை ஒதுங்கியது. இதை நாகை கடலோர காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் கைப்பற்றினர்.

தரங்கம்பாடி அருகே கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்களை யாராவது கடத்தி வந்தனரா? என்பது பற்றி கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கடலோர பகுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்