கார் விபத்தில் 3 பேர் காயம்

நாங்குநேரி அருகே கார் விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-28 19:54 GMT

நாங்குநேரி:

வள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் கார் ஒன்றில் விருதுநகர் சென்றுவிட்டு நேற்று மாலையில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நாங்குநேரி வாகைகுளம் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பில் மோதியது. இதில் காரில் இருந்த சிவசுப்பிரமணியம் (வயது 70), ராஜசெல்வின் (53), கார் டிரைவர் சண்முகவேல் (56) ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்