பலத்த மழையால் 3 வீடுகள் இடிந்தன

பலத்த மழையால் 3 வீடுகள் இடிந்தன.

Update: 2022-06-17 19:10 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாண்டராயன்கட்டளை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மேலத்தெருவை சேர்ந்த விஸ்வநாதனின் மனைவி முத்துலட்சுமியின்(வயது 62) கூரை வீடு இடிந்து விழுந்தது. வீடு முழுமையாக இடிந்த நிலையில், வீட்டில் இருந்த முத்துலட்சுமி இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து முத்துலட்சுமியை மீட்டனர். அவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரையின் மனைவி மல்லிகா வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. மேலும் சுள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில் சவுந்தரராஜனின் மனைவி ராஜகுமாரி(42) என்பவரது வீட்டின் சுவரும் மழையால் இடிந்து விழுந்தது. இந்த சம்பவங்களில் அந்த வீடுகளில் இருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்