அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 3 மணிநேரம் நடை அடைப்பு
மேல்மலையனூரில் இன்று அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 3 மணிநேரம் நடை அடைப்பு
விழுப்புரம்
இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திரகிரகணம் ஏற்படுவதால் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவில் நடை சாத்தப்படுகிறது. தொடர்ந்து பரிகார பூஜைகள் நடைபெற்ற உடன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.