மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், தங்கும் விடுதியுடன் கூடிய பார்கள், படை வீரர் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் உள்ளிட்டவை வரும் 27-ந்தேதி(இன்று), 29-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "27.10.2023 சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டும், 29.10.2023 மற்றும் 30.10.2023 ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.