சமையலர் உதவியாளர்களுக்கு 3 நாள் புத்தாக்க பயிற்சி

சமையலர் உதவியாளர்களுக்கு 3 நாள் புத்தாக்க பயிற்சி நடந்தது.

Update: 2023-09-19 18:07 GMT

ஆரணி

சமையலர் உதவியாளர்களுக்கு 3 நாள் புத்தாக்க பயிற்சி நடந்தது.

ஆரணி, மேற்கு ஆரணி, சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பா.விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், சத்துணவு மேலாளருமான எஸ்.ஆனந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி புத்தாக்க பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

பயிற்சியில் ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், சேத்துப்பட்டு ஒன்றியங்களுக்கு உட்பட்ட சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். புத்தாக்க பயிற்சி வகுப்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் கலந்து கொண்டு, ''குழந்தைகளுக்கு சமைக்கும் சத்துணவுகளை முறையாக சமைக்கப்பட வேண்டும் கையுறை, தலை உறைகளை அணிந்து பாதுகாப்பான முறையில் சமையல் செய்ய வேண்டும்'' என்பதை விளக்கி பேசினார்.

புத்தாக்க பயிற்சியில் சுகாதாரத்துறை சார்பில் புனித வேலன், சாரதி, தீயணைப்பு துறை சார்பில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன், வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சுரேஷ் பிரகாஷ் ஆகியோரும் பேசினர். பயிற்சி இன்றும் நாளையும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்