வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-10-21 18:45 GMT

நல்லம்பள்ளி:

பாளையம்புதூர் அருகே கூன்மாரிக்கொட்டாய் கிராமத்தை ஒட்டி உள்ள போடாரிக்காடு வனப்பகுதியில் கேட்பாரற்று 3 நாட்டு துப்பாக்கிகள் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கேட்பாரற்று கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் கிடந்தது குறித்து பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தொப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாட்டு துப்பாக்கிகளை வனப்பகுதியில் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்