மோட்டார் சைக்கிள் திருடிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
நாகர்கோவில் அருகே வடக்கு கோணம் பகுதியை சேர்ந்த மரிய ஸ்டீபன் கிளாரன்ஸ் மகன் ரியாஸ் (வயது 20), எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று வீட்டு முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ரியாஸ் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று ராஜாக்கமங்கலம் போலீசார் நாகர்கோவில் அருகே கீழகோணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
3 மாணவர்கள் கைது
இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வடக்கு கோணம் பகுதியில் திருட்டு போன ரியாஸ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், பிடிபட்டவர்களான புத்தளம் பகுதியை சேர்ந்த அசோகன் மகன் தனபால் (19), புத்தளம் சேதுபதியூர் பகுதியை சேர்ந்த அசோகன் மகன் ஹரிராம் (19) மற்றும் நாகர்கோவில் ராமன்புதூர் சற்குண வீதி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.
பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.