சிறுவனிடம் செல்போனை பறித்த 3 கல்லூரி மாணவர்கள் கைது

சித்தன்னவாசல் பூங்காவில் சிறுவனிடம் செல்போனை பறித்த 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-23 19:20 GMT

திருமயம் அருகே உள்ள ஊனையூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் சித்தன்னவாசலுக்கு சுற்றி பார்க்க சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் சித்தன்னவாசல் பூங்காவில் நின்ற போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த சிறுவன் வைத்திருந்த செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுவன் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கல்லூரி மாணவர்களான போயத்தான்நல்லூர் பகுதியை சேர்ந்த அஜய் (வயது 19), அரசன்கரை பகுதியை சேர்ந்த அதிபதி (19), கோனாவயல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (19) மற்றும் கைவேலிப்பட்டியை சேர்ந்த காந்தி, மேலவிடுதியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் செல்போனை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கல்லூரி மாணவர்களான அஜய், அதிபதி, மாரிமுத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்