மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பாபநாசம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-18 20:31 GMT

பாபநாசம்:

பாபநாசம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் தேவராயன்பேட்டை குடமுருட்டி ஆற்றில் இருந்து மணல் ஏற்றி கொண்டு வந்த 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்