அட்சயபுரீஸ்வரர் கோவிலில் 3 வெண்கல சிலைகள் திருட்டு

அட்சயபுரீஸ்வரர் கோவிலில் 3 வெண்கல சிலைகள் திருட்டு

Update: 2022-11-16 19:53 GMT

சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவிலில் 3 வெண்கல சிலைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

அட்சயபுரீஸ்வரர் கோவில்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளம் கிராமத்தில் அட்சயபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள் வைக்க உரிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

இதனால் சிலைகள் திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது. இதற்கு பதிலாக கடந்த 2011-ம் ஆண்டு கிராமத்தினர் ஐம்பொன் சிலைகளின் மாதிரியை கொண்டு 1½ அடி உயரம் கொண்ட அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் ஆகிய 3 வெண்கல சிலைகளை செய்து அட்சயபுரீஸ்வரர் கோவிலில் வைத்து வழிபட்டு வந்தனர்.

3 வெண்கல சிலைகள் திருட்டு

கடந்த 13-ந்தேதி இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு முடிந்ததும், அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்றுமுன்தினம் மாலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர், நடராஜர் சன்னதி பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அர்ச்சகர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் கிராமத்தினர் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது நடராஜர் சன்னதியில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த வெண்கல அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் ஆகிய சிலைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ஆனால் அங்கிருந்த நடராஜர் சிலை மட்டும் திருட்டு போகவில்லை. திருட்டு போன சிலைகளின் மதிப்பு ரூ.60 ஆயிரம் என கூறப்படுகிறது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்தில் கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி புகார் கொடுத்தார். அதன்ே்பரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை திருடி ெசன்ற மா்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்