அரூர் அருகே ராமியம்பட்டியில் அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் மாயம்-போலீசார் விசாரணை

அரூர் அருகே ராமியம்பட்டியில் அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-07 18:45 GMT

அரூர்:

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அரூர் அருகே ராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி கவிதா. தற்போது கணவன்-மனைவி இருவரும் நாகர்கோவிலில் டெலிபோன் கேபிள் பதிக்கும் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு விருத்தாசலம் (வயது 13), சக்திவேல் (8), மித்திரன் (5) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். விருத்தாசலம் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், சக்திவேல் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மகன்கள் ராஜாவின் தாயாரின் ரத்தினம் பராமரிப்பில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் விருத்தாசலம், சக்திவேல், பக்கத்து வீட்டு குப்புசாமி என்பவரின் மகனும், 8-ம் வகுப்பு மாணவனுமான மணிகண்டன் (12) ஆகிய 3 பேரும் திடீரென மாயமானார்கள். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் குடும்பத்தினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ரத்தினம் செல்போன் மூலம் தனது மகனுக்கு தகவல் தெரிவித்ததார். இதையடுத்து ஊருக்கு வந்த ராஜா, சிறுவர்கள் காணாமல் போனது குறித்து கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்