கஞ்சா வைத்திருந்த 3 சிறுவர்கள் கைது
வேப்பூர் அருகே கஞ்சா வைத்திருந்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனா்.
ராமநத்தம்:
வேப்பூர் அருகே உள்ள நகர் பகுதியில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது நகர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த 17 வயதுடைய 2 சிறுவர்களையும், 18 வயதுடைய ஒரு சிறுவனையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.