பள்ளியை சேதப்படுத்திய வாலிபர்கள் உள்பட 3 கைது
கனியாமூர் கலவரத்தில் பள்ளியை சேதப்படுத்திய வாலிபர்கள் உள்பட 3 கைது
கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கலவரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கலவரத்தின்போது பள்ளியை இடித்து சேதப்படுத்திய நாகலூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் தேவேந்திரன்(வயது 20), வேலு மகன் சதீஷ்பாபு(20) மற்றும் போலீசார் மீது கல் வீசி தாக்கிய கனியாமூர் கிராமத்தை சேர்ந்த சின்னையன்(45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.