திருப்பத்தூர் தனியார் மதுபாரில் நடந்த மோதலில் 3 பேர் கைது
திருப்பத்தூர் தனியார் மதுபாரில் நடந்த மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் தனியார் மது பார் இயங்கி வருகிறது. இதில் சம்பவத்தன்று பணியாளர்களுக்கும் திருப்பத்தூர் அச்சுக்கட்டு தெருவை சேர்ந்த சேதுவல்லி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சேதுவல்லியை தாக்கியதால் தனது மகன்களை வரவழைத்து உள்ளார். மேலும் அங்கு வந்த அவரது 2 மகன்களையும் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சேதுவல்லி மற்றும் அவரது மகன் சுஜித் (வயது 29), சிவபிரகாஷ் ஆகிேயார் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருமயத்தைச் சேர்ந்த சிவகுமார் (31), காளையார்மங்கலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (27), பரமக்குடியைச் சேர்ந்த காளீஸ்வரன் (27) ஆகிய 3 பேரை திருப்பத்தூர் நகர் போலீசார் கைது செய்தனர்.