தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது

தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-20 20:16 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி அருகே உள்ள நல்லாங்குளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). கூலி தொழிலாளி. இவர் வயல் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து நல்லாங்குளத்தை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் நல்லாங்குளத்தை சேர்ந்த குருசாமி மகன் முத்துராமலிங்கத்தை சந்தேகத்தின் பேரில் தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் அவ்வப்போது முத்துராமலிங்கம் (29) செய்யும் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மணிகண்டனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த நல்லாங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (25), லெட்சுமணன் (27) ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமலிங்கம், மணிகண்டன், லெட்சுமணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்