தூத்துக்குடியில்கோழி கறிக்கடை ஊழியர்கொலை வழக்கில் 3 பேர் கைது

தூத்துக்குடியில்கோழி கறிக்கடை ஊழியர்கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-14 18:45 GMT

தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 41). இவர் அழகேசபுரத்தில் உள்ள கோழி கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். 3 செண்ட் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்த சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய முகேஷ் மற்றும் தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்த தங்கமணி மகன் பத்திரகாளிமுத்து என்ற முத்துப்பாண்டியன் (27), எஸ்.என்.ஆர் நகரைச் சேர்ந்த ஜெயமுத்துலிங்கம் (25) ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் முகேசின் தம்பி மூர்த்தி மீரான் (20), முகேசின் தந்தை சண்முகவேல் (47) ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்