கார் டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

கும்பகோணம் கார் டிரைவர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-06-01 20:30 GMT

கும்பகோணம்

தஞ்சை மாவவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் தினேஷ் என்கிற தினகரன் (வயது 28). கார் டிரைவர். இவர், நேற்று முன்தினம் மதியம் வெளியில் சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இ்ந்தநிலையில், அன்று மாலை பெருமாண்டி பத்மநாதபுரம் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினகரன் உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்தி (21), மேலக்காவேரி செக்கடிதெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயகுமார் என்ற கிரி (22) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் மாலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலக்காவேரியை சேர்ந்த கர்ணன் மகன் மணிகண்டனை(25) போலீசார் கைது செய்தனர். அவர்கள் என்ன காரணத்துக்காக தினகரனை கொலை செய்தனர் என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்