சின்னசேலம் அருகேமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் சின்னசேலம் அடுத்த இந்திலி முருகன் கோவில் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அவர்களிடம் 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி அண்ணாமலை நகர் வைரமூர்த்தி மகன் கார்த்திகேயன் (வயது 41), பாண்டியன்குப்பத்தை சேர்ந்த ஆலமுத்து மகன் ஆனந்த் (22), பூண்டியை சேர்ந்த கண்ணன் மகன் குபேரன் (23) ஆகியோர் என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.