சாராயம் விற்ற 3 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-19 16:52 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் மல்லாபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் (வயது 45) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக கொடியனூரை சேர்ந்த வெள்ளையன் (40), புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (56) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்த 150 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்