கஞ்சாவுடன் வந்த 3 பேர் கைது
விருதுநகர் அருகே கஞ்சாவுடன் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே வெள்ளூர் சிதம்பராபுரம் ரோட்டில் ஆமத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சீட்டுக்கு அடியில் 100 கிராம் கஞ்சா இருந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்த பிரவீன்குமார் (வயது22) உள்பட 3 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.