ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தாக்கிய 3 போ் கைது
ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தில் உள்ள டி.கே.தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் மகேஷ் (வயது 31), ஊராட்சி மன்ற துணைத்தலைவர்.
மோட்டார் சைக்கிளில் மகேஷ் சென்ற போது, சென்னை ஓட்டேரியை சேர்ந்த ரவி மகன் கோபாலகிருஷ்ணன் (26), மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் சதீஷ் (20), வரதன் மகன் வினோத்குமார் (28) ஆகியோர் மகேசை வழிமறித்து தாக்கியதாகவும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், வினோத் குமார், சதீஷ் ஆகிய 3 கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.