வெப்படை பகுதியில், வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் பறித்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

வெப்படை பகுதியில், வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் பறித்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

Update: 2022-06-04 17:00 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் அதிகளவில் ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து செல்போன் பறிப்பு சம்பவம் நடப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் சார்பில் வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெப்படை அருகே உப்புபாளையம் பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களை தாக்கி செல்போன் பறித்ததாக வெப்படை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சேலம் சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் தீர்த்தன் (வயது 21), சுரேஷ் (19), மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கடந்த 10 நாட்களில் 6 செல்போன்களை பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்